---Advertisement---

பி.எட் கல்லூரிகளுக்கு…. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கொடுத்த எச்சரிக்கை…!

By Sri
Published on: September 3, 2024
---Advertisement---

பி.எட் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் பி.எட் கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பி.எட் கல்லூரிகளில் முறைகேடான சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்து இருக்கின்றது.

இது தொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. மேலும் வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.

வகுப்புக்கு வராதவரை தேர்வு எழுத வைத்தால் பி எட் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வரும் காலங்களில் பி.எட் கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமானது பி எட் கல்லூரிகளுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது” குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.