---Advertisement---

குஜராத்தை மிரட்டி வரும் ‘அஸ்னா’ புயல்… தீவிரப்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்…!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ‘அஸ்னா’ புயலால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக இதுவரை 29 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

1200 பேர் வெள்ளத்தில் சிக்கியிருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20,000 முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தண்ணீர் அபாய அளவை கடைந்து பாய்ந்து வருவதால் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது.

தற்போது அரபிக்கடலில் பகுதியில் நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று இருக்கிறது. இது மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. நேற்று 11:30 குஜராத்தின் பூஜ் பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கே 190 கிலோமீட்டர் அருகே மையம் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள்.

இதையடுத்த இரண்டு நாட்களில் இந்திய கடற்பகுதியை விட்டு கடந்து விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இந்த புயலுக்கு அஸ்னா என பாகிஸ்தான் பெயர் வைத்திருக்கின்றது. தற்போதைய சூழல் படி புயல் மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை. அதுமட்டுமில்லாமல் குஜராத்தில் நேற்று மாலை வெகுவாக குறைந்திருந்தது. வெறும் 4 பகுதிகளில் மட்டுமே 15 மில்லி மீட்டர் முதல் 26 மில்லி மீட்டர் வரை மழை பெய்திருந்தது.

இருப்பினும் குஜராத்தில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிசைகள் மற்றும் பலவீனமான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிகள் கோவில்கள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு இடம்பெயரும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கும். குஜராத் மக்களுக்கு இந்த புயல் சின்னம் மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Portrait visual of actress Divya Bharathi discussing her career insights.

‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!

Editorial visual representation of Ken Karunas and director Chella Ayyavu's upcoming comedy project.

கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்: இயக்குநர் செல்ல அய்யாவுடன் கூட்டணி!

Visual representation of Keerthy Suresh's special social media post for Nani's The Paradise.

நானியின் ‘தி பேரடைஸ்’ வெளியீடு: கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வைரல் க்ளிக்ஸ் மற்றும் வாழ்த்துச் செய்தி!

Official launch event visual for actor LK Akshay Kumar's movie #LkAkshayKumar03.

எல்.கே. அக்‌ஷய் குமாரின் புதிய படம் ‘LK Akshay Kumar 03’ பூஜையுடன் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official announcement poster for the second single 'OneSunOneMoon' from Jailer 2.

ஜெயிலர் 2 படத்தின் 2வது சிங்கிள் ‘ஒன் சன் ஒன் மூன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அனிருத் இசையில் செப்டம்பர் 25-ல் வெளியீடு!

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!