---Advertisement---

கொடைக்கானலில் பார்பிக்யூ சிக்கன்… 2 இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

By Sri
Published on: August 10, 2024
---Advertisement---

கொடைக்கானலில் இளைஞர்கள் பார்பிக்யூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு அடுப்பை அணைக்காததால் புகையில் மூச்சு திணறி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கொடைக்கானல் அருகே இருக்கும் சின்னபள்ளம் என்ற சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.

அப்போது ஜெயக்கண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்தி கொண்டே பார்பிக்யூ சிக்கனை சமைத்து சாப்பிட்டு உள்ளார்கள். சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து அவர்களே எடுத்து வந்திருக்கிறார்கள். அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்க சென்று விட்டனர்.

மற்றொரு அறையில் இருந்த நண்பர்கள் காலை எழுந்து வந்து எழுப்பிய போது இருவரும் இறந்து கிடந்தன. சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணமடைந்ததாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.