---Advertisement---

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 22 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது… வானிலை எச்சரிக்கை…!

By Sri
Published on: August 10, 2024
---Advertisement---

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, கோவை , புதுக்கோட்டை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் பரவலான மழை பெய்து வந்த நிலையில் இன்றும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.