---Advertisement---

தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு…!

By Sri
Published on: July 31, 2024
---Advertisement---

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது.

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட நிலச்சரிவு அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் முண்டகப் பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாத அளவிற்கு மாறி இருக்கின்றது. அனைத்து இடங்களும் மண்ணாலும் மரங்களாலும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தேசிய மீட்டு படையினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நிலச்சரிவில் சிக்கி பல பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மண்ணில் புதையுண்ட பலரை மீட்பப்படியினர் தேடி வருகிறார்கள். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ள நிலையில் இன்னும் 225 பேர் காணாமல் போனதால் அவர்களைத் தேடும் பணியும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது.

உயிரிழந்தவர்களின் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கும், 64 சடலங்கள் உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாயமான நபர்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெறும் 40 வீடுகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது. இந்த தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க