---Advertisement---

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி… சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு..!

By Sri
Published on: July 29, 2024
---Advertisement---

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் இருக்கின்றது. அரசு மருத்துவமனைகளை போல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் மருத்துவமனைகளில் அனைத்து தடுப்பூசிகளும் இலவசமாக போடுவதை போல தனியார் மருத்துவமனைகளிலும் போடுவதற்கான திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகின்றது. அந்த மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுகிறோம் என்று உறுதி அளித்தால் தடுப்பூசியை சுகாதாரத்துறை வழங்கும். பொது மக்களிடம் இருந்து வசூல் செய்யக்கூடாது என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.