---Advertisement---

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமா நடத்துங்க… இல்லனா ஆக்சன் தான்… போக்குவரத்து துறை அதிரடி..!

By Sri
Published on: July 20, 2024
---Advertisement---

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: “மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும், இறங்கும் பொழுதும் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களை அவமதிக்கக் கூடாது. மாற்று திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு அவர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்கு ஏற்ற முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மயங்கி நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும்போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுனர்களுக்கு, நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.