---Advertisement---

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…

Published on: July 9, 2024
Amstrong
---Advertisement---

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரின் பரபரப்பான பகுதியான பெரம்பூரில் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை  உருவாக்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் தனது இல்லத்தில் நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சிலர் காவல் துறையினரிடம் சரணடைந்தர். கொலை சம்பவத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது, இதற்கான பின்னனி என்ன என்பது குறித்து தீவிர விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

CM Stalin Armstrong Family
CM Stalin Armstrong Family

இந்நிலையில் இன்று சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்றிருந்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் தனது இரங்கலையும், ஆறுதலையும் சொன்னார்.

முன்னதாக படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினார் ஸ்டாலின். அமைச்சர் சேகர் பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ரெங்கனாதன்  ஆகியோரும் அப்போது உடனிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து... நிவாரணம் அறிவித்த முதல்வர்...!

முன்னதாக ஆம்ஸ்ட்ராங் மரணம் மீதான இரங்கலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுருந்தார் ஸ்டாலின்.இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகு சென்னை மாநாகர காவல் ஆணையர் மாற்றப்பட்டார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?