---Advertisement---

முஸ்லீம் நாடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லீம் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யல- கஸ்தூரி

Published on: June 6, 2022
---Advertisement---

நபிகள் நாயகம் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக சொல்லப்படும் பிரச்சினையில் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விசயத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றன. இந்த விசயத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை நீக்கம் செய்த பிறகும் இந்தியாவிடம் தொடர்ந்து விளக்கம் கேட்பதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், இஸ்லாமிய நாடுகள் இரண்டு பில்லியன் மக்களின் உணர்வுகளுக்காக கூடவே நிற்பதாக கூறும் நாடுகள், ஆப்கானிஸ்தான், சிரியா,சீனா, அல்லது பர்மாவில் முஸ்லீம்களுக்காக எதுவும் செய்ததில்லை.

எல்லாருடைய வெறுப்பு பேச்சையும் நான் கண்டிக்கிறேன். மதத்தை முன்னிறுத்தி மனித நேயத்தை மலர செய்ய வேண்டும் என கஸ்தூரி கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.