---Advertisement---

IPL 2019: ஹைதராபாத் அபாரம்! மீண்டும் தோல்வியை சந்தித்தது டெல்லி!!

By Sri
Published on: April 5, 2019
Delhi Capitals vs Sunrisers Hyderabad
---Advertisement---

ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மோதியது.இதில், டாஸ் வென்ற புவனேஷ்வர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ப்ரித்விஷா 11, தவன் 12 நிலைக்கவில்லை. ஷ்ரேயஸ் ஐயர் 43 (41) ரன்கள் எடுத்தார், ரிஷப் பண்ட்டும் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து வந்த ராகுல் த்ரிப்பாத்தியா மற்றும் இன்கிராம் நிலைக்கவில்லை.க்ரிஸ் மோரிஸ் மற்றும் அக்ஷர் படேல் அடித்து ஆட அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 129/8 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கை எட்டிய ஹைதராபாத் அணியின் வார்னர் 10 நிலைக்கவில்லை. ப்ராஸ்டோ சிறிது நேரம் அடித்து ஆடினார், 28 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். எளிதில் எடுக்க வேண்டிய ரன்னை, டெல்லி அணியின் அதிரடியான பந்துவீச்சால், சிறிது நேரம் தடுமாறினாலும், 18.3 ஓவர்களில் 131/5 ரன்கள் அடித்நு ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.இதனால், ஹைதராபாத் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.