---Advertisement---

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு 34 வருடத்துக்கு பின் தண்டனை

Published on: May 20, 2022
---Advertisement---

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேனாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.சிறந்த முறையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளை விளையாடிவர்.

ஆரம்பத்தில் பாஜகவில் இவர் இருந்து வந்தார். ஆனால் கடந்த பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் மாநில அமைச்சராகவும் சித்து இருந்திருக்கிறார்.

சித்துவின் கார்  பாட்டியாலாவில் கடந்த 1988ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. அப்போது தனது வாகனம் மீது மோதிய நபர்களுடன் சண்டையிட்டு ஒரு கட்டத்தில் முதியவர் ஒருவரை தாக்கினார்.

குர்ணம் சிங் என்ற அந்த முதியவர் சித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சித்து மீது வழக்கு பதியப்பட்டது. முதலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்பு பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தபோது, அதனை எதிர்த்து சித்து மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில் அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அத்துடன் உச்ச நீதிமன்றம் தற்போது அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தனுஷ் நடிப்பில் கிரே மேன் படத்தின் டிரெய்லர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திப் படம்.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!