நேற்று மழையால் உடல் மரத்துப்போய் மரம் விழுந்து உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்பவர் தன் தோளில் தூக்கி சுமந்து ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வைத்து அவரது உயிரை காப்பாற்றினார்.
இன்ஸ்பெக்டரின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.டிஜிபி சைலேந்திரபாபுவும் அவரை பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
எத்தனை இடர் வரினும் இருள் சூழினும் மனிதநேயம் எனும் மணிவிளக்கின் ஒளி அவற்றைப் போக்கி புது நம்பிக்கையை அளிக்கிறது!
உதயா என்பவரின் உயிரைக் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் செயல் அத்தகைய ஒளியே!
அவரை நேரில் அழைத்துப் பாராட்டினேன். pic.twitter.com/zO2LV5hvFE
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 12, 2021













