---Advertisement---

திருப்பதியில் டோக்கன் பெற குவியும் மக்கள்

Published on: September 21, 2021
---Advertisement---

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாக சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், விஐபி பிரேக் தரிசனம் மூலமும், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவர்களும் வழக்கம் போல் சுவாமியை தரிசித்தனர்.

இதனால், இலவசமாக ஏழு மலையானை சாமானிய பக்தர்கள் தரிசிக்க இயலாமல் போனது. இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. சுமார் 4 மாதங்கள் கழித்து சோதனை அடிப்படையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்களுக்கு மட்டும் சர்வ தரிசன முறையை மீண்டும் திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்தியது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால், வழக்கம் போல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனால், நேற்று முதல் தினமும் 8 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் தீர்மானித்தது. புரட்டாசி மாதம் என்பதால், இதனை அறிந்த பக்தர்கள் தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இரவு முதலே திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காலை 6 மணி முதல் டோக்கன்கள் வழங்கும் பணி தொடர்கிறது.

தினமும் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே தர்ம தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் எனவும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதி முறைகளை கண்டிப்பாகஅனை வரும் கடைபிடிக்க வேண்டு மெனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Director Anil Ravipudi during the official pooja ceremony of VenkyAnil5 NKRAR2 project.

“தியேட்டரில் வெறித்தனமான ஃபன் கேரண்டி!”.. வெங்கடேஷ் – கல்யாண் ராம் கூட்டணியில் அனில் ரவிபுடியின் மெகா மல்டிஸ்டாரர் லோடிங்.. பூஜையுடன் தொடங்கிய பிரம்மாண்டப் பயணம்!

Actor-director Vishal in a powerful posture from the official promotional banner of Magudam movie first single Rise of Linga.

“மாஸ் காட்ட வரும் விஷாலின் ரைஸ் ஆஃப் லிங்கா!”.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஜிவி பிரகாஷின் அதிரடி ட்ரீட்!

Director Shankar son Arjith Shankar along with director H Vinoth and Jason Sanjay during the official movie launch event of Lover Boy.

“டைட்டில் லவ்வர் பாய்.. பக்காவா லாக் செய்த காம்போ!”.. கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. விஜய் மகன் சஞ்சய், இயக்குநர் ஹெச் வினோத் நேரில் வாழ்த்து!

Producer Ishari K Ganesh of Vels Film International sharing upcoming movie release updates during a corporate press meet.

“அடுத்தடுத்து தியேட்டருக்கு வரும் வேல்ஸ் படங்கள்!”.. ஐசரி கணேஷ் வெளியிட்ட அதிரடி லோடிங்.. ஜூலை 3-ல் ரிலீஸாகும் ‘கட்டா குஸ்தி 2’!

Actor Dhanush in a fierce and intense look from the official First Strike video layout of OM movie directed by Rajkumar Periasamy.

“அமரன் இயக்குநரின் அடுத்த ருத்ரதாண்டவம்!”.. தனுஷின் D55 படத்திற்கு ‘ஓம்’ என மாஸ் டைட்டில் பிக்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் வெளியான வெறித்தனமான ஃபர்ஸ்ட் ஸ்டிரைக் வீடியோ!

Director Nag Ashwin during a conceptual tracking breakdown phase of the Kalki cinematic universe architecture.

“இந்திய சினிமாவில் இதான் முதல்முறை!”.. கல்கி 2 ரிலீசுக்கு முன் ஓடிடியில் வெளியாகும் 1 மணி நேர கேரக்டர் ஸ்பின்-ஆஃப் படங்கள்.. நாக் அஸ்வினின் மிரட்டலான மாஸ்டர் பிளான்!