சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதில் இன்று திருவல்லிக்கேணி பகுதிகளில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி-பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார் உதயநிதி.













