டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள 2 டியோக்ஸி ஓரல் பவுடர் என்ற மருந்து இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இம்மருந்தை குடித்தால் கொரோனா நோயாளிகள் சாதாரண சளி காய்ச்சல் போலவே விரைவாக சரியாகி விடுவார்களாம்.
இன்று இம்மருந்தை
நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.
இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கொரோனா நோயாளிகளிடம் நடத்தினர். 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து வெற்றியாக அமைந்ததையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை 27 கோவிட் மருத்துவமனைகளில் உள்ள 220 கொரோனா நோயாளிகள் மீது பரிசோதிக்கப்பட்டது.
இந்த 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகள் அனைத்தும் டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாகச் செயல்படுகிறது, ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது, ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் விரைவில் இல்லாமல் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இம்மருந்து நல்ல பலனளிப்பதால் இன்று முதல் இம்மருந்து விநியோகிக்கப்படும் என தெரிகிறது. இம்மருந்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிடுகின்றனர்.
இம்மருந்து முதலில் 10000 பாக்கெட்டுகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. மருந்து உற்பத்தி வேகமாக தொடங்கி விரைவில் அனைத்து இடங்களுக்கும் விநியோகிக்கப்பட இருக்கிறது.







