நேற்று தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது போல கேரளாவிலும் நடந்தது. தேர்தல் குறித்து பேசிய பினராயி விஜயன் தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதாக கூறினார்.கேரள சட்டப்பேரவைக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இது குறித்து பினராயி விஜயன் பேசும்போது, ஸ்வாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதாக மக்கள் தங்களுக்கு சாதகமாக வாக்களித்து இருப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
வரலாற்று ரீதியான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள். தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரி இயக்கத்தில் இருக்கும் முதலமைச்சர், இந்துக்களின் வாக்குக்காக இப்படி பேசலாமா என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.













