புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அனுராதா. இவரும் இவரது தம்பி மாரிமுத்துவும் சேர்ந்து ராவணன் என்ற காளையை வளர்த்து வந்தனர். பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றதற்காக ராவணனை தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர் பரிசாக வழங்கி இருந்தார்.
சுற்றுவட்டார ஜல்லிக்கட்டு போட்டிகளில் எல்லாம் ராவணனை பிடிக்க முடியாது என இந்த காளை பெயர் எடுத்திருந்தது.
கடந்த வருடம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் இந்த காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை.
சொல்லப்போனால் காளைகளில் ராவணன் ஒரு விஐபியாக இருந்தது. எல்லோரும் அறிந்த காளையாக இருந்தது.
ராவணனை சப் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் தம்பி உரிய முறையில் பராமரிப்பு செய்து வளர்த்து வந்தார்.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட ராவணன் திடீரென காணாமல் போனது.
இந்த நிலையில் தச்சன்குறிச்சி அருகே காளை நிற்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது பாம்பு புற்று அருகே நின்று கொண்டிருந்தது. பாம்பு அதை கடித்திருந்தது பாம்பு கடித்த கோபத்தில் பாம்பு புற்றை முட்டி இடித்து தள்ளி இருக்கிறது. விஷம் ஏறிய காளை அங்கேயே இறந்திருந்தது.
இதனால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கவலையடைந்தனர். ஒரு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட காளையை பார்த்து சுற்றுவட்டார மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.













