தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் உள்ளது ஆதிநாதர் கோவில். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதிகளில் இக்கோவில் குருஸ்தல பரிகார கோவில். ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த ஊர்.
இக்கோவிலுக்கு தினமும் அதிகமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோவில் யானையான ஆதிநாயகி தினமும் டீக்கடையில் சென்று டீ சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
தினமும் ஆற்றுப்படுகைக்கு சென்று குளிப்பதும், பின்பு பாகனுடன் சென்று டீ வடை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
பாகன் யானைக்கு குவளையில் டீயை ஆற்றிக்கொடுக்க அது குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.













