---Advertisement---

Dhanush Fans Mega Annadanam! — தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் சிக்கன் பிரியாணி தான்; இன்று சாலிகிராமத்தில் நடிகர் இளவரசு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்!

By Sri
Published on: May 25, 2026
Actor Ilavarasu and South Chennai Dhanush fan club members distributing chicken biryani during the birthday charity event at Saligramam.
---Advertisement---

தமிழ் சினிமாவுல தங்களோட ஆக்டிங் மற்றும் மாஸான படங்கள் மூலமா உலக லெவல்ல மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வச்சிருக்கு ற ஒரு டாப் ஸ்டார் தான் நம்ம தனுஷ் (Dhanush).

இப்போ இருக்குற முன்னணி ஹீரோக்கள்ல தனுஷோட ரசிகர்கள் எப்போதுமே அவரோட பிறந்தநாளை ரொம்பவே வித்யாசமாவும், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையிலயும் நலத்திட்ட உதவிகள் செஞ்சு கொண்டாடுறதை வழக்கமா வச்சிருக்காங்க. அந்த வகையில, இப்போ தனுஷோட பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தினர் எடுத்துள்ள ஒரு மாஸான நெகிழ்ச்சி முடிவு சோசியல் மீடியா முழுக்க செம வைரலாகிட்டு வருது.

தனுஷின் பிறந்தநாள் வர்ற ஜூலை 28-ஆம் தேதி வரைக்கும் ஒரு நாள் கூட கேப் விடாம தினமும் மதிய வேளையில பசியோடு இருக்குற மக்களுக்கு சாப்பாடு வழங்க அவங்க பக்காவா பிளான் பண்ணியிருக்காங்க.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, தென் சென்னை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக சென்னை சாலிகிராமத்தில் தினமும் (ஜூலை 28 வரை) ஏழை எளிய மக்களுக்கு பிரம்மாண்டமான முறையில அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அன்னதானம்னா? வெறும் சாம்பார் சாதம், தயிர் சாதம் இல்லை ஆல் டைம் வைப் சிக்கன் பிரியாணி தான்.

இந்த மெகா அன்னதான நிகழ்ச்சியின் 8-ஆம் நாளான இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான இளவரசு (Ilavarasu) சிறப்பு விருந்தினராக நேரில் கலந்துகொண்டு இந்த அன்னதானத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். ரசிகர்களோடு சேர்ந்து மக்களுக்கான இந்த நற்பணியைத் தொடங்கி வச்ச நடிகர் இளவரசு, தனுஷ் ரசிகர்களின் இந்த செயலை ரொம்பவே பாராட்டிப் பேசினாரு. இந்த 8-வது நாள் அன்னதான விழாவில் மட்டும் சாலிகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000 பேருக்கு சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி (Chicken Biryani) ரசிகர் மன்றம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

தனுஷோட பிறந்தநாளுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்குற நிலையில, இப்போதிருந்தே அவரோட ஃபேன்ஸ் சென்னை முழுக்க இந்த மாதிரி அன்னதானம் செய்யற வீடியோ சோசியல் மீடியா சினிமா குரூப்கள்ல செம ஸ்பீடா ஷேர் ஆகிட்டு வருது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing Sivakarthikeyan's new focus on commercial advertisements.

SK update: விளம்பரப் படங்களில் நடிக்க தீவிரமான முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!: ‘சேயோன்’ படத்தைத் தொடர்ந்து பிராண்ட் எண்டார்ஸ்மென்ட் பக்கம் திரும்பும் மாஸ் ஹீரோ!

Title announcement concept graphic for Suriya's 47th film as a police officer.

Suriya 47: விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் மாஸ் டைட்டில்!: ‘ஆவேசம்’ இயக்குநர் படத்தில் காக்கிச் சட்டையில் மிரட்டும் சூர்யா – தீபாவளி 2026 ரிலீஸ்!

Promotional banner for Rocking Star Yash's high-grossing film Toxic.

Toxic Movie Update: வசூலில் சாதனை, ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள்!: பாக்ஸ் ஆபிஸில் புயல் கிளப்பும் யஷின் ‘டாக்சிக்’ – முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

Concept graphic representing actress Aishwarya Lekshmi's potential role in Atlee and Allu Arjun's Raaka.

RAAKA Movie Update: அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஐஸ்வர்யா லட்சுமி!: பான்-இந்தியா படமான ‘ராகா’வில் வில்லி கதாபாத்திரமா? – லேட்டஸ்ட் பஸ்!

Conceptual graphic representing actress Sreeleela's status in Ajith Kumar's Daredevil.

Daredevil Movie Update: அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திலிருந்து விலகுவாரா ஸ்ரீலீலா?: தீவிரம் காட்டும் கால்ஷீட் பிரச்சனை – லேட்டஸ்ட் சினிமா நிலவரம்!

Concept graphic representing Jayam Ravi's devotional film directed by Vishnu Sasi Shankar.

Actor Ravi Mohan’s Next: ஐயப்ப பக்தராக களமிறங்கும் ஜெயம் ரவி!: ‘மல்லிகாபுரம்’ இயக்குநருடன் கைகோர்க்கும் மாஸ் ஹீரோ – லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!