நிவார் புயல் என்ற புதிய புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. தற்போது சென்னைக்கு 740கிமீ தொலைவில் மையமிட்டுள்ள நிவார் புயலால் பலத்த மழை மற்றும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் எந்த பகுதியில் கரையை கடக்கும் என இன்னும் கணிக்கப்படவில்லை இந்த நிலையில் நிவார் புயலால் எந்த பகுதி பாதிக்கப்பட்டாலும் அங்கு மின்சார பாதிப்பு ஏற்பட்டு மின்கம்பங்கள் சாயும் நிலை ஏற்பட்டால் அந்த நேரத்தில் நிலைமையை சமாளிக்க தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.













