---Advertisement---

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி பூரண குணம் ! தமிழக மருத்துவர்கள் சாதனை!

By Sri
Published on: April 9, 2020
---Advertisement---

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது முதிய பாட்டி ஒருவர் பூரண குணமாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று புதிதாக 48 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவர்களோடு சேர்த்து  மொத்த எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோன தொற்றில் இறந்தவர்களில் 64 சதவீதத்துக்கும் மேலானவர்கள் வயதானவர்கள என சொல்லப்பட்ட நிலையில் இப்போது தமிழகத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 74 வயது மூதாட்டி ஒருவர் பூரண குணமடைந்துள்ளார். அதுவும் அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழுவதும் குணமான அவர் இப்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.