---Advertisement---

பீகாரில் புனித நீராடும் பண்டிகையில்… 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்…!

By Sri
Published on: September 26, 2024
---Advertisement---

பிஹார் மாநிலத்தில் புனித நீராடும் பண்டிகையில் நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பீகார் மாநிலத்தில் ஜீவித்புத்ரிகா என்கின்ற புனித நீராடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையில் 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும்  3  பேரை காணவில்லை என்று கூறப்படுகின்றது. 15 மாவட்டங்களில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் இந்த பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்ததாக அம்மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது. ஜீவித்புத்ரிகா என்பது பீகாரில் உள்ள மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக விரதம் அனுசரித்து தங்கள் குழந்தைகளுடன் நதி அல்லது குளத்தில் புனித நீராடுவார்கள்.

மேலும் இந்த சம்பவத்தில் 37 குழந்தைகள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

விஜய் மற்றும் அஜித் பற்றிப் பேசும் இயக்குனர் எச்.வினோத்.

True Stars Revealed: Vinoth Praises! – விஜய், அஜித் மனிதாபிமானம்: எச்.வினோத் நெகிழ்ச்சி!

Director Atlee praises the Ramayana trailer.

Atlee’s Epic Praise: Ramayana Trailer Blows Everyone Away! – ராமாயணம் டிரெய்லர்: அட்லீயின் அதிரடிப் பாராட்டு! வியந்துபோன இயக்குனர்!

Advance bookings open for JanaNayagan movie.

Booking Fever: JanaNayagan Hits Theaters! – முன்பதிவு சூடுபிடித்தது! ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட் – பிரீமியர் ஷோக்கள் எப்போது?

Actress Aishwarya Lekshmi quits social media platforms.

Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Thalapathy Vijay's Thirupaachi re-releasing in theaters.

Thirupaachi Re-Release Confirmed! – மெகா பிளாக்பஸ்டர் மீண்டும் வருகை! திரையரங்குகளில் ரிலீசாகிறது தளபதியின் ‘திருப்பாச்சி’!

தேசிய விருதுகள் குறித்து கலா மாஸ்டர் விளக்கம்.

National Award Snubs Exposed – கடும் போட்டி! தனுஷ், சேதுபதி, சிவகார்த்திகேயன் – தேசிய விருது கிடைக்காதது ஏன்? உண்மையை உடைத்த கலா மாஸ்டர்!