கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம் என்கின்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 13.13 கோடி பயனாளிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 89 லட்சத்து 3, 310 பயனாளிகள் இருக்கின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அவர்களின் பங்கேற்பை எளிதாக குழந்தைகள் காப்பகத்திற்கான ஏற்பாடு, இருப்பிடம் அருகிலேயே பணி என்பது உள்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் தரவுத்தளம் கடந்த நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாநிலங்கள் வாரியாக விவரத்தை வெளியிடப்பட்டது. அதில் 89.2 இடம் பெற்று கேரளா முதலிடத்தில் இருக்கின்றது.
புதுச்சேரி இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றது. மிகவும் குறைவாக ஜம்மு காஷ்மீர் 32.5 சதவீத பங்களிப்பு மட்டுமே கொடுத்திருக்கின்றது. கேரளா புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே 70 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களின் பங்கேற்பினை தந்திருக்கின்றது. 50 முதல் 70% பங்கேற்பினை 16 மாநிலங்கள் கொடுத்துள்ளனர்.







