---Advertisement---

தமிழகத்தில் இந்த வருடம் ஜூலை வரை… சாலை விபத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,536 பேர் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகும். அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை வரை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அதில் கூறியிருப்பதாவது ‘தமிழகம் முழுவதும் விபத்துகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 66 உயிரிழப்பு விபத்துகள் நடந்தன.

அந்த விபத்துகள் மூலம் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவில் 10 ஆயிரத்து 589 உயிரிழப்பு சாலை விபத்துகள் நடந்தன. அதன் மூலம், 11 ஆயிரத்து 106 பேர் உயிரை விட்டனர். கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு சாலை விபத்துகள் 5 சதவீதம் குறைவாகும். அதாவது 523 உயிரிழப்பு விபத்துகள் குறைந்துள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 570 உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

570 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை வேகமாக வாகனங்களை ஓட்டி சென்றதாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டி சென்றதாக இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 624 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 777 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதிக பொருட்களை ஏற்றி சென்றதாக 6 ஆயிரத்து 944 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74 ஆயிரத்து 13 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதேபோல், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர்கள் மீதும், பின்னால் உட்கார்ந்து சென்றவர்கள் மீதும் மொத்தம் 35 லட்சத்து 78 ஆயிரத்து 760 வழக்குகள் பதிவாகி உள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக 3 லட்சத்து 39 ஆயிரத்து 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனங்களை ஓட்டியதற்காக 76.15 லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளது. விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி சென்றதற்காக ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, 39 ஆயிரத்து 924 பேர்களின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic highlighting blockbuster actress Preity Mukhundhan's journey into Kollywood with her parents' support.

நடிக்க என்னைத் தூண்டியது என் பெற்றோர்தான்: பிளாக்பஸ்டர் நாயகி பிரீதி முகுந்தன் ஓபன் டாக்!

Conceptual graphic representing the exciting collaboration between director Mohan Raja and actor Karthi.

எம்.குமரன் மற்றும் தனி ஒருவன் கலவை: கார்த்தி ஜோடிக்கும் மோகன் ராஜா – அதிகாரப்பூர்வமாக வெளியான செம மாஸ் அப்டேட்!

Conceptual graphic representing the collaboration between actor Vishal and director RS Durai Senthilkumar for 7 Screen Studio.

விஷாலின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்: லலித் குமார் உதவியால் மீண்டும் இணையும் கூட்டணி – இயக்கவிருக்கும் பிரபல இயக்குநர்!

Concept graphic celebrating Maestro Ilaiyaraaja's soulful composition of the Muthumani song for Dorothy.

இளையராஜாவின் மேஜிக் ஹார்மோனியம்: ‘டொரா தி’ படத்தின் ‘முத்துமணி’ பாடல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட படக்குழு!

Official release date announcement poster for Fahadh Faasil's Don't Trouble The Trouble.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஃபஹத் பாசிலின் ‘டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ புதிய ரிலீஸ் தேதி வெளியீடு!

Popular Kollywood actor brothers Suriya and Karthi sharing a warm bond.

கார்த்தி பற்றி நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு: “அவன் வழி தனி வழி.. அவனுக்கு சினிமாதான் உலகம்!” வைரலாகும் பாராட்டு!