---Advertisement---

மருத்துவர்களை வீட்டை காலி செய்ய சொல்கிறார்களா? பரபரப்பைக் கிளப்பிய புகார்!

By Sri
Published on: March 25, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் நோயாளுகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மூலம் வைரஸ் தொற்று மேலும் பரவலாம் என்ற அச்சத்தில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அவர்களின் வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியும் சிலரைக் கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இது பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து அவ்வாறு செய்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித் ஷா அறிவித்துள்ளார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க