---Advertisement---

பரபரப்பான சாலையின் நடுவே நாற்காலி போட்டு அமர்ந்த நபர்… அடுத்து நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!

By Sri
Published on: August 31, 2024
---Advertisement---

உத்தரப்பிரதேசத்தில் சாலையின் நடுவே ஒரு நபர் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டிருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் உள்ள சாலையின் நடுவே அதுவும் அங்குள்ள போலீஸ் சாவடிக்கும் முன்பு ஒரு நபர் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கின்றார். அந்த நபர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறாரா? அல்லது ரவுடித்தனம் செய்கின்றாரா? என்பது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும் பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருக்கின்றார். இந்த சாலையில் அவரை கடந்து இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து செல்கின்றது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்றை அவரை இடித்துச் செல்லும் காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகின்றது.

இந்த வீடியோவை பத்திரிகையாளர் ரன் விஜய் சிங் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேசத்தில் ஒரு நபர் போலீசாவின் முன்பு நடுரோட்டில் நாற்காலியை போட்டு அமர்ந்திருக்கின்றார். ஒரு லாரி அவரை நெருங்கி வருகின்றது. லாரி அவரை இடித்ததை பார்க்க முடிகின்றது.

லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே விழுகின்றார். லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விடுகின்றது. லாரி அவரை மோதினாலும் கீழே விழுந்த அந்த நபர் தனது நிலையிலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல் இருக்கின்றார். தொடர்ந்து சாலையில் எப்படி விழுந்தாரோ அப்படியே அமர்ந்து இருக்கின்றார்.

அவரது நாற்காலி உடைந்தது, வாகனங்கள் மோதிவிடும் என்ற அச்சமில்லாமல் சாலையில் தொடர்ந்து அவர் அமர்ந்திருக்கின்றார். மீண்டும் தொடர்ந்து வாகனங்கள் அவரை கடந்து செல்கின்றன. போலீஸ் நிலையத்தின் வாசலில் ஒருவர் நின்றதாகவும் இந்த சம்பவம் குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிகின்றது.

https://twitter.com/ag_Journalist/status/1829453268822474846

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!

Actor Suriya praising Dorothy movie poster.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Jailer 2 movie censor debate poster.

சென்சார் சோதனையில் சிக்கிய ரஜினியின் ‘ஜெயிலர் 2’: ‘ஏ’ அல்லது ‘உ/ஏ’ சான்றிதழுக்காக நடக்கும் விவாதம் என்ன?