---Advertisement---

திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனத்துக்கு தடை

Published on: March 9, 2022
---Advertisement---
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிரமமின்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை ஆணையர் சில நிபந்தனைகளுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, கோவிலில் ஏற்கனவே இருந்து வந்த, நடைமுறையில் உள்ள ரூ.250 சிறப்பு தரிசன கட்டணம் மற்றும் ரூ.20 கட்டணம் தரிசனம் முறை ரத்து செய்யப்படுகிறது. ரூ.100 கட்டணமும் மற்றும் பொது தரிசனம் மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.
இந்த தரிசன முறையிலும் மூலவரை இருவரிசையில் வருபவர்களும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தரிசன முறை மாற்றம் இன்று முதல் (புதன்கிழமை) நடைமுறைப் படுத்தப்படுகிறது.
அதேபோல் கோவில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் முதல் கட்டமாக இன்று முதல் 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொதுதரிசன முறையில் வரும் பக்தர்கள் மகாமண்டபத்தில் இருந்து ஒரே வழியில் அனைத்து பக்தர்களும் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் கைங்கர்யம் செய்யும் திரிசுதந்திரர்கள் தங்கள் பெயரை கோவிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், திரிசுதந்திரர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க முறைபடுத்தப்பட்டுள்ளது. இம்முறை இன்று முதல் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!

'மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் மிரட்டலான முதல் தோற்றப் போஸ்டர்.

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணன் முதல் தோற்றம்: இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மகாவீர் கர்ணா’!

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!