Latest News
எந்திர நாயை கண்டு பதறி ஓடும் செல்ல பிராணிகள்… வைரலாகும் வீடியோ…!
எந்திர நாயை பார்த்ததும் நிஜ நாய்கள் பதறி அடித்து ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய சூழலில் எல்லா துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. எந்திரங்களின் பயன்பாடு ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில் மனிதன் சிந்தனைகள் கொண்ட ரோபோக்களை உருவாக்கும் முயற்சி தீவிரமாகி வருகின்றது. நாய் உருவம் கொண்ட ரோபோக்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டும் இல்லாமல் ராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் வாலிபர் ஒருவர் இந்த ரோபோ நாயை அண்மையில் வாங்கி இருக்கின்றார். அதனை பூங்காவில் இயக்கி பார்த்திருக்கின்றார். அப்போது தன் எஜமானர்களுடன் வந்திருக்கும் செல்லப்பிராணிகள் அந்த ரோபோ நாயை பார்த்ததும் பயந்து குறைத்தார்கள்.
பின்னர் அங்கிருந்து விலகி தெறித்து ஓடினார்கள். இந்த வீடியோ காட்சிகளானது இணையதள பக்கங்களில் வெளியாகி வருகின்றது. நாய்கள் ஓடுவது போல் எந்திரம் மனிதர்களை பார்த்து மனித இனமும் ஓடும் காலம் வந்து கொண்டிருக்கின்றது. அது வெகு தொலைவில் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.