---Advertisement---

ஸ்டாலின் நல்லா நாடகம் போடுறாரு… 19 அம்மா உணவகங்களை மூடியது ஏன்..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

By Sri
Published on: July 20, 2024
---Advertisement---

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அம்மா உணவகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்துவதற்கு முயற்சித்து விட்டு தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றார்.

முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அம்மா உணவகத்தில் ஆய்வு என்கின்ற பெயரில் நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கின்றார். முதல்வர் ஆய்வுக்கு வருவார் என்பதை தெரிந்து உணவகத்தில் தரமான உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?

தமிழகத்தில் அன்னலட்சுமி ஆக செயல்பட்டு பல ஏழை எளிய மக்களுக்கு உணவிட்டு வந்த அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடியது ஏன்? புதிய அம்மா உணவகங்களை அம்மா ஆட்சியின் போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயங்க நிர்வாக திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியிருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.