இந்தியாவில் செல்ஃபோன் அறிமுகமான காலத்தில் அது பெரிய செங்கல் போல இருந்தது. செங்கலை கையில் தூக்கி திரிய முடியாதல்லவா அதனால் 2000ங்களின் ஆரம்பத்தில் செல்ஃபோன் முதன் முதலில் சிறிய வடிவம் எடுத்தது.
நோக்கியா நிறுவனத்தினர் முதன் முதலில் 3310 என்ற மாடலை அறிமுகப்படுத்தினர். நோக்கியா கம்பெனி அறிமுகப்படுத்திய இந்த ஃபோன் கைக்கு அடக்கமாக இருந்ததால் விற்பனையில் சக்கை போடு போட்டது.
கிட்டத்தட்ட 2006ம் ஆண்டு வரை செகண்ட் சேல்ஸ் ஆக இந்த மொபைலை விற்றாலும் ஓரளவு நல்ல விலைக்கு போனது.
2000ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த மொபைல் வெளியிடப்பட்டதாம்
2007க்கு பிறகு செல்ஃபோனில் பல மாற்றங்கள் ஏற்பட்டு கடைசியாக ஆண்ட்ராய்டு போன் வந்து விட்டது.
இருப்பினும் பழையதை மறக்காத 90ஸ் கிட்ஸ்கள் இந்த செல்ஃபோனில் உள்ள பாம்பு விளையாட்டையும் ரிங் டோன் கம்போஸ் செய்து விளையாடுவதையும் நினைவில் வைத்து சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.







