---Advertisement---

திருட வந்ததாக நினைத்து… மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை வெளுத்து வாங்கிய கிராம மக்கள்… வைரல் வீடியோ..!

By Sri
Published on: September 18, 2024
---Advertisement---

திருடன் வந்ததாக நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்து கிராம மக்கள் சூடு வைத்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரின் கணவரையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்திரபிரதேசம் என்ற மாவட்டத்தில் சுரவுலியில் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மனநல பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண் ஒருவர் உலாவி வந்திருக்கின்றார்.

சுரவுலியில் மற்றொரு பகுதியைச் சேர்ந்த பெண் வழி தவறி அங்கு வந்ததாக கூறப்படுகின்றது. அவரை தேடிக் கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்திற்குள் வந்திருக்கின்றார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என்று சந்தேகப்பட்ட கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.

மேலும் பழுக்க காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து பின்னர் அங்கிருந்து விரட்டி இருக்கிறார்கள். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன்பு அவரிடம் சிலர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. பின்னர் கிராமத்தினர் அடித்து சூடு வைத்து சித்திரவதை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

https://twitter.com/ManojSh28986262/status/1836325183163916706

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Gowtham Sivaraman and music director Leon James attending Drama Company Production No 1 movie official launch pooja ceremony.

டிராமா கம்பெனியுடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்; புதிய இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களம் இறங்கும் 2 டாப் நடிகைகள்!

Director Mari Selvaraj and music composer Isaignani Ilaiyaraaja collaborating for new movie M6 titled Manjanathi official poster.

வாழை பட இயக்குநரின் அடுத்த படைப்பு; இசைஞானியுடன் இணையும் புதிய படத்தின் தலைப்பு இதோ!

Actor Raghava Lawrence and producer Lokesh Kanagaraj Benz movie LCU connection poster with Kaithi and Leo references.

லோகேஷ் கனகராஜின் எல்சியு அதிரடி… கைதி மற்றும் லியோ படங்களுடன் இணையும் புதிய மெகா பட்ஜெட் படம்!

Actor Dhanush and director Vasanthabalan throwback picture discussing scripts at a cinema event.

அங்காடி தெரு கதையைக் கேட்டு தனுஷ் சொன்ன அந்த ஒரு வார்த்தை; பல வருடங்களுக்குப் பின் வெளியான அதிரடி உண்மை

Hollywood actress Emma Myers from Wednesday series praising Indian blockbuster movies Baahubali and 3 Idiots in a viral interview.

பாகுபலி, 3 இடியட்ஸ் படங்களை உருகி உருகிப் பாராட்டிய ஹாலிவுட் நடிகை… இணையத்தைக் கலக்கும் ஆல் ஈஸ் வெல் மேஜிக்!

Mega Power Star Ram Charan and Janhvi Kapoor attending Peddi movie Chennai press meet live promotional event.

சிங்கார சென்னைக்கு வரும் டாப் மாஸ் ஹீரோ… ஜூன் 4ல் தியேட்டர்களை அதிரவைக்க வரும் மெகா பட்ஜெட் படம்!