---Advertisement---

30 வருடங்களாக புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம்… எங்கு இருக்கு தெரியுமா..?

By Sri
Published on: October 3, 2024
---Advertisement---

30 வருடங்களாக ஒரு கிராமத்தில் புகையிலை மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

கொப்பல் மாவட்டம், காமனூர் என்கின்ற கிராமம் ஒன்று இருக்கின்றது. இந்த கிராமத்தில் 600 வீடுகள் இருக்கின்றன. இங்கு 3000க்கும் அதிகமான நபர்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 30 வருடத்திற்கு மேலாக மதுபானம் புகையிலை போன்றவை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிராமத்தில் ஒரு ஓட்டல் கூட இல்லை என கூறப்படுகின்றது.

அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை அதிகமாக இருந்தது. இதனால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது மக்கள் தவித்து வந்தார்கள். இதனால் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் இணைந்து இனி கிராமத்தில் மதுபானம் புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்தனர்.

மேலும் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்கள். அனைவரும் சம்மதம் தெரிவித்த பிறகு அன்றைய தினம் முதல் இன்று வரை அந்த கிராமத்தில் எந்தவித மது பாட்டில்களோ, புகையிலை பொருட்களோ விற்பனை செய்யப்படுவதில்லை. காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக வைத்து இன்று வரை அதை கடமையாக கடைப்பிடித்து வருகிறார்கள் கிராம மக்கள். இதனால் காமனூர் கிராமம் தற்போது காந்தி கிராமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. கிராம மக்களின் இந்த செயல்பாட்டிற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor GV Prakash sharing insights about his upcoming pan-India vampire movie Immortal during a press meet.

GV Prakash Reveals About Immortal: இந்திய சினிமாவுக்கே இது புதுசு: ‘இம்மார்டல்’ படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட ஷாக் தகவல்!

Official shooting wrap concept poster for the emotional family drama Thagappan.

Thagappan Shooting Wrapped Up: ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு உணர்வு: நிறைவடைந்தது ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு – டிசம்பர் 2026-ல் திரைக்கு வருகிறது!

Concept graphic representing the upcoming collaboration between director Siruthai Siva and actor Dhanush.

Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!

பிறக்கப் போகும் குழந்தை குறித்து சமந்தா அளித்த பதில் குறித்த வைரல் தகவல்.

Samantha’s Playful Reply: ரசிகர்களின் கேள்விக்கு நடிகை சமந்தாவின் கியூட் & ஜாலி பதில்!

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!