---Advertisement---

தூத்துக்குடியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியிடம் பிரதமர் வீடியோவில் பேச்சு

Published on: October 25, 2020
---Advertisement---

தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது முடி திருத்தும் கடையில் அதிக நூல்களை வாங்கி வைத்திருப்பார். முடி திருத்த வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த புத்தகங்களை படித்து கொண்டிருப்பார்கள்.

இவரைப்பற்றி நீண்டகாலமாகவே சமூகவலைதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பிரதமர் அவருடன் வீடியோ கான்பிரசிங்கில் உரையாடினார்.

இருவரும் உரையாடியது

பிரதமர் மோடி: முடி திருத்தகத்தில் நூலகம் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?
பொன்.மாரியப்பன்: நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்தேன்.
பிரதமர் மோடி: உங்களுக்கு பிடித்த புத்தகம் எது?
பொன்.மாரியப்பன்: எனக்கு பிடித்தது திருக்குறள்.
பிரதமர் மோடி தன்னுடன் பேசியதில் பெரும் மகிழ்ச்சி என்று கூறி நன்றி தெரிவித்தார் பொன்.மாரியப்பன்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.