நம்ம ஊரில் பஸ்ஸை கையால் தள்ளுவதுதான் நடக்கும் . பஸ் சென்று கொண்டிருக்கும்போது பஸ் பழுதாகி விட்டால் உடனே இறங்கி தள்ள சொல்லுவார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு ரயிலை அது போல தள்ள சொல்லி இருக்கும் விசயம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஹர்தா ரயில் நிலையத்தில் பழுதான ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு தள்ள சொல்லியுள்ளனர்.
இதில் சிலர் காலணி கூட அணியவில்லையாம். கூர்மையான ஜல்லிகற்கள் குத்த ரயிலை தள்ளிக்கொண்டே சென்றுள்ளனர்.













