---Advertisement---

Vijay Antony’s Appakutty First Look Out! — “இந்த தடவை எமோஷன் கலந்த அதிரடி ஆட்டம்!” — விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’ மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்; வைரலாகும் போஸ்டர்!

Published on: May 21, 2026
Official intense first look poster of actor Vijay Antony from his upcoming movie Appakutty directed by Mu Maran.
---Advertisement---

விஜய் ஆண்டனி ரசிகர்களை அதிர வைக்கும் விதமாக ஒரு வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது ரிலீஸாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து வருகிறது. ‘பிச்சைக்காரன்’ படம் மூலம் எமோஷனல் ஆக்ஷன் கதைகளில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிப்பில் உருவாகும் புதிய படமான ‘அப்பாக்குட்டி’ (Appakutty) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்ரேஷன் (Vijay Antony Film Corp) நிறுவனமே தங்களது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ பட புகழ் இயக்குநர் மு.மாறன் (Director Mu Maran) எழுதி இயக்கியுள்ளார். “ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இடையே நடக்கும் எமோஷன் மற்றும் ஆக்ஷன் நிறைந்த ஒரு வெறித்தனமான பயணம் தான் இந்த அப்பாக்குட்டி” என்கிற செம பவர்ஃபுல்லான கேப்ஷனுடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனியே இந்த படத்திற்கு இசையமைக்கிறார் (A Vijay Antony Musical). ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசப் போராட்டத்தையும், எதிர்பாராத விதமாக அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளையும் மையமாக வைத்து பக்கா கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லராக இந்த கதையை இயக்குநர் மு.மாறன் செதுக்கியுள்ளாராம். டீசண்ட் கமர்ஷியல் எலிமெண்ட்ஸ் உடன் விஜய் ஆண்டனியின் டிரேட்மார்க் மாஸ் இதில் தூக்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Market Crisis Effect: "ரூ.163 கோடியிலிருந்து ரூ.90 கோடியா?"... சம்பள விஷயத்தில் இறங்கி வந்த அஜித் குமார்? அடுத்த பட அறிவிப்பு தாமதமாவதற்கு இதுதான் காரணமா? கோலிவுட்டில் பரவும் ஹாட் நியூஸ்!

சமீபத்தில் ‘எல்லோ எல்லோ டர்ட்டி ஃபெல்லோ’ படத்தில் கமிட்டாகி கவனம் ஈர்த்த நடிகை பிரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) இப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ளார். இவர்களுடன் ஹரிதா, பகவதி பெருமாள் (Bucks), லிதன்யா சிவபாலன், ஹரிப்ரியா மற்றும் பிரவீனா லலிதாபாய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியின் அந்த ராவான மற்றும் இன்டென்ஸான லுக் எக்ஸ் (X) தளத்தில் தற்பொழுது சினிமா ரசிகர்களால் பயங்கர ட்ரெண்டாக்கப்பட்டு லைக்குகளைக் குவித்து வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Cinematic editorial concept visual celebrating the iconic blockbuster combination of Thalapathy Vijay, Trisha, and director Dharani in Ghilli.

விக்ரம் நடித்த பிளாக்பஸ்டர் படத்தை முதலில் நிராகரித்த தளபதி விஜய்! தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் பகிர்ந்த மிரட்டலான சினிமா ரகசியம்!

Book cover concept visual representing Seenu Ramasamy's Soul of Cinema translated by M. Abinaya and published by Notion Press.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற சினிமா புத்தகம்… விஜய் சேதுபதி வெளியிட்ட லேட்டஸ்ட் வைரல் பதிவு!

Promotional concept graphic representing Prashanth's upcoming courtroom drama Ranjan The Advocate, the Tamil remake of Telugu hit Court.

டிசம்பர் 1 முதல் மீண்டும் தொடங்கும் பிரசாந்தின் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ படப்பிடிப்பு! ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

Editorial concept graphic representing Tamil actor Shiva's humorous press meet interaction regarding politics.

அரசியலுக்கு வரப் போகிறாரா அகில உலக சூப்பர் ஸ்டார்? “தமிழ்நாடு மட்டுமல்ல உலகப் பிரச்சனையையே தீர்க்கப் போகிறேன்!” என சிவா கிண்டல்!

Promotional concept graphic representing the high-voltage clash between Ajith Kumar and Shivarajkumar in Adhik Ravichandran's Daredevil.

ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதையும், அஜித் பேசிய வார்த்தையும்… ஹைதராபாத் இரவுப் படப்பிடிப்பில் இணையும் சிவண்ணா!

Promotional concept graphic representing the upcoming Tamil romantic drama starring GV Prakash Kumar and Malavika Manoj, directed by Hariharan Ram.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் புதிய படம்… ‘ஜோ’ கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?