---Advertisement---

2-வது நாளாக இன்றும் சரிந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

By Sri
Published on: August 23, 2024
---Advertisement---

தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்திருக்கின்றது. நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளியவர்கள் தங்கத்தை ஒரு முதலீட்டாக பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் தங்கம் என்பது நம் வாழ்க்கையில் எட்டாம் கனியாகி விடும் என்று எண்ணி வந்தார்கள்.

இந்நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்தின் இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது இது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .நேற்று தங்கம் விலை 240 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று மேலும் தங்கம் விலை குறைந்திருக்கின்றது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,660 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து 91.70 விற்பனையாகி வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Exclusive: Anshu Ambani Talks "Mazaka" and Her Exciting Role!

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.