---Advertisement---

5,000 ஏரி மற்றும் குளங்களில் உடனே இத செய்யுங்க… ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு…!

By Sri
Published on: September 11, 2024
---Advertisement---

தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாருவதற்கு 500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

தென்மேற்கு பருவமழை முடிவு பெற உள்ளது. தமிழகத்தில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயத்திற்கு பயன் தரக்கூடிய ஏரிகள் மற்றும் குளங்களை தூர்வாரி தயார் நிலைப்படுத்துவதுடன் நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றது.

இதில் முதல் கட்டமாக ஐந்தாயிரம் சிறுபாசன ஏரி குளங்கள் தூர்வாரப்படுகின்றன. அதற்காக தமிழக அரசு 500 கோடி நிதியாக ஒதுக்கி இருக்கின்றது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “நீர் நிலைகளை தூர்வாரி மழை நீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 நீர் பாசன ஏரிகளில் முதற்கட்டமாக 5000 சிறுபாசான ஏரிகளை புறனமைப்பதற்காக கடந்த 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் சிறுபாசான ஏரிகளை இயந்திரங்களை பயன்படுத்தி தூர்வாறுதல், ஆழப்படுத்துதல், உபரி நீர் போக்கு, மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் பழுது பார்த்தல், புனரமைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் செயல்படுத்துவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தலையில் இருந்து கொட்டிய ரத்தம்... விமானத்தில் கைது செய்யப்பட்ட பயணி... பரபரப்பு சம்பவம்...!

இதன் மூலம் நீர் நிலைகளின் கொள்த்திறன் அதிகரிக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாயம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதி மூலமாக பணிகள் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring actress Rashmika Mandanna.

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

Editorial visual featuring the pooja ceremony launch of Soori 7.

சூரி – ரவிகுமார் கூட்டணியின் புதிய படம் ‘சூரி 7’ பூஜையுடன் தொடக்கம்: சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்!

Editorial visual featuring the teaser release of Sathyavan Savithiri.

கீர்த்தி சுரேஷ் – மிஷ்கினின் ‘சத்யவான் சாவித்திரி’ டீசர் ரிலீஸ்: உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring actress Aishwarya Lekshmi.

“என் துணையின் முன் ஒரு குழந்தையாக மாற வேண்டும்!”: காதல் குறித்து மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring actress Mrunal Thakur.

கடந்த 9 மாதங்களாக புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகாத நடிகை மிருணாள் தாக்கூர்: காரணம் என்ன?