---Advertisement---

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் பலி – சுகாதாரத்துறை விளக்கம்!

By Sri
Published on: March 28, 2020
---Advertisement---

கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த கொரோனா நோயாளிகள் ஏற்கனவே இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்கள் ரத்த மாதிரிகளில் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுபற்றி சுகாதார துறை சார்பில் கூறியிருப்பதாவது, இன்று இறந்த மூன்று பெ நோயாளிகளில் 2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும், 66 வயது மீனவர் சிறுநீரக நோய் காரணமாகவும், 24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.