---Advertisement---

திருச்சி பிரபல நகைக்கடையில் நகை கொள்ளை – சிசிடிவி கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள்

By Sri
Published on: October 2, 2019
robbery
---Advertisement---

திருச்சியில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது லலிதா ஜூவல்லரி நகை கடை. இந்த கடை கீழ் மற்று மேல் தளம் என 2 தளங்களில் செயல்படுகிறது. அந்த கடையில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் கீழ்தளத்தில் உள்ள பல கோடி மதிப்புடையை நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த நகைகளின் மதிப்பு ரூ.50 இருக்கலாம் என கூறப்படுகிறது.

நகை கடையின் பின்புறம் உள்ள கல்லூரி மைதானத்தின் வழியாக அவர்கள் வந்து, சுவற்றை ஓட்டையிட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் அவர்கள் உள்ளே வந்துள்ளனர். மோப்பநாய் தங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என கொள்ளையர்கள் மிளகாய் பொடியை அங்கு தூவி சென்றுள்ளனர். முகமூடி அணிந்து அவர்கள் நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு திருச்சி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.