---Advertisement---

வெற்றிமாறனும், நம்ம சிம்புவும் சேர்ந்து பண்ணியிருக்கிற ‘அரசன்’ படத்தோட பிரமோ, இப்ப ஏரியா முழுக்க பத்திக்கிட்டு எரியுது!

By Sri
Published on: October 17, 2025
Arasan Video Promo
---Advertisement---

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் TR (STR) நடிப்பில் உருவாகி வரும் அரசன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (பிரமோ), தமிழ் சினிமா ரசிகர்களைத் தீவிரமாக விவாதிக்க வைத்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், வெற்றிமாறனின் மிகவும் புகழ்பெற்ற கேங்ஸ்டர் படமான வடசென்னை’யின்  உலகத்தை விரிவுபடுத்துகிறது என்பதுதான் இதன் பிரதான சிறப்பம்சம்.

‘அரசன்’ படத்தின் பிரமோவில், இது வடசென்னையின் சொல்லப்படாத ஒரு கதை” என்று அறிவிக்கப்பட்டது, இது ரசிகர்களிடையே இருந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தியது. இந்தப் படத்தில் சிம்பு இரண்டு காலக்கட்டங்களில் தோன்றுவதுடன், அசல் ‘வடசென்னை’ படத்தில் இருந்த சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் போன்ற சில முக்கிய கதாபாத்திரங்களும் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனாலும், தனக்கு உலகளவில் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்த தனுஷின் பாத்திரம் (அன்பு) இந்தப் படத்தில் இடம்பெறாது என்றும் வெற்றிமாறன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Arasan Simbhu

பிரமோவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படுவது, படத்தில் உள்ள ஒரு காட்சியே ஆகும். கோர்ட்ல நரைச்ச முடியோட நிக்குற நம்ம சிம்பு கேரக்டர், அங்க இருக்கிற டைரக்டர் நெல்சன் திலீப்குமார் அண்ணன்கிட்ட (சின்ன ரோல்), “என் கதையெல்லாம் படமா எடுக்குறீங்கன்னா… சின்ன வயசுல நடிக்குறதுக்கு தனுஷை போட்டா நல்லா இருக்கும்!” என்று சிம்பு கூறுவதுதான் அந்த ட்விஸ்ட்.

உண்மையில் ‘வடசென்னை’ படத்தின் ஸ்கிரிப்ட் ஆரம்பத்தில் சிம்புவை மனதில் வைத்தே எழுதப்பட்டது. பின்னர், சில காரணங்களால் தனுஷை வைத்து அப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இந்த வரலாற்றுத் தகவலைப் பிரமோவில் ஒரு வசனமாகக் கையாண்டது, பல வருடங்களாக இருந்த ஒரு சர்ச்சைக்குப் பதிலளிப்பதாகவும், திரையுலகத்தில் இரு பெரிய நடிகர்களின் பரஸ்பர மரியாதையைக் காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது. .

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing the historic collaboration between directors Shankar and AR Murugadoss.

Breaking News: ஷங்கர் – ஏ.ஆர்.முருகதாஸ் மெகா கூட்டணி: தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்டப் படம்!

Official single release announcement graphic for the song Muthumani from Dorothy.

Dorothy Second Single: டோரதி படத்தின் இரண்டாவது பாடல் ‘முத்துமணி’ நாளை வெளியீடு!: இசைஞானி இளையராஜா இசையில் கலக்க வரும் அடுத்த மெலடி – செப்டம்பர் 25 ரிலீஸ்!

Concept graphic representing producer Yuvaraj Ganesan and Million Dollar Studios projects.

Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Official musical update concept graphic for Karthik Subbaraj's film Dorothy.

Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

Official release date announcement poster for Vijay Deverakonda's period action drama Ranabaali.

Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

Conceptual graphic representing director Ashwath Marimuthu's vision for Thalapathy Vijay's biopic.

Vijay’s Biopic: தளபதி விஜய்க்கு பயோபிக் எடுத்தால் என்ன தலைப்பு வைப்பேன்?: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் சுவாரஸ்யமான சினிமா கனவு!