---Advertisement---

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் பெற்றோர் பரிதவிப்பு

Published on: October 8, 2021
---Advertisement---

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடி வார்டில் ஒரு பெண் அவருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் எனக் கூறி உதவி செய்வதுபோல் நடித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமிக்கு உதவுவதுபோல் நடித்து அவருடனேயே இருந்துள்ளார். இதனால், அந்தப் பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.
இன்று, 8ஆம் தேதி காலை அந்தப் பெண் ராஜலட்சுமியிடம், “நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள். நான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜலட்சுமியும் குளிக்கச் சென்றார்.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையைக் கட்டைப்பையில் வைத்துக் கடத்திக் கொண்டு வேகமாகச் சென்றுள்ளார். இதற்கிடையே, குளிக்கச் சென்றுவிட்டு வார்டுக்கு வந்த ராஜலட்சுமி, குழந்தையைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பதறியடித்துக் கொண்டு பல இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து, உடனடியாகத் தனது கணவர் குணசேகரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால், குழந்தையின் நிலை தெரியவில்லை. அப்போதுதான் ராஜலட்சுமிக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து, அவர் கணவரிடம் கூறினார். மேலும், இது தொடர்பாக மேற்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தஞ்சாவூர் நகர டிஎஸ்பி கபிலன் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் கட்டைப்பையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில், போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். மேலும், நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்தப் பெண் பற்றிய அடையாளங்களைக் கூறி, தேடி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Official theatrical release poster for Vijay Antony's movie Appa Kutty.

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியீடு!

Official trailer promotional poster for the movie DontTroubleTheTrouble.

ஃபகத் பாசிலின் ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ மிரட்டலான டிரெய்லர் வெளியீடு! அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

'பத்தா' படத்தின் 'ஊரோட ஒத்த டான்' பாடலின் அதிகாரப்பூர்வ விளம்பரப் போஸ்டர்.

மக்களின் இசையில் கலக்கும் ‘பத்தா’ படத்தின் இரண்டாவது சிங்கிள்: விஜய் சேதுபதியின் ‘ஊரோட ஒத்த டான்’ பாடல் வெளியீடு!

Promotional poster for Ashok Selvan and Preity Mukundan's Anbil Avan.

அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Collaborative file photo of Nanjil Vijayan and Vaishu.

மனக்கசப்புகள் நீங்கி ஒன்றுபட்ட நாஞ்சில் விஜயன் – வைஷு: சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சமாதானம்!