ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல வருடங்களாக கடும் போர் செய்து காபூல் நகரை கைப்பற்றினர். இது வரை மக்களாட்சி நடந்து வந்த ஆப்கானிஸ்தானில் இனி தாலிபான்களின் கொடூர ஆட்சிதான் என பயந்து மக்கள் ஊரை விட்டு ஓடி வருகின்றனர்.
தாலிபான்களும் நாங்கள் 20 வருடத்துக்கு முன்பு இருந்த தாலிபான் இல்லை இப்போ மாறி விட்டோம் என கூறி வருகின்றனர்.
இருப்பினும் இரண்டு நாட்களுக்கு முன் அங்கிருந்த ஜிம் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் தாலிபான்கள் விளையாடி மகிழ்ந்த காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில் பூங்காவை இன்று தாலிபான்கள் எரித்ததாக செய்திகள் வெளியானது. இதில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிராக சிலைகள் இருந்ததால் எரித்ததாகவும் கூறப்படுகிறது.
#NEWSUPDATE | தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்!#SunNews | #Afganistan | #Talibans pic.twitter.com/s2kvPq08cx
— Sun News (@sunnewstamil) August 18, 2021













