---Advertisement---

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு… அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்…!

By Sri
Published on: September 10, 2024
---Advertisement---

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்து இருக்கின்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது: “அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் அன்று விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். 2006 முதல் 2024 வரை 1589 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தது. திமுகவுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கின்றது.

அதிமுக-க்கும் உடன்பாடு இருக்கின்றது. இடதுசாரி கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கின்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் உடன்பாடு உள்ளது. எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில் மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன் என்பதுதான் பலரின் கேள்வி நல்ல சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற வாதம் ஏற்புடையது கிடையாது.

சாராயம் என்றாலே அது கேடுதான். அதில் நல்ல சாராயம் என எதுவும் கிடையாது. உள்ளத்திற்கு உடலுக்கும் தீங்கானது தான் சாராயம். சமூகத்திற்கும் தேசத்திற்கும் கேடானது. எனவே முழுமையான மதுவிலக்கு தான் தீர்வாக இருக்க வேண்டும். அரசாங்கமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுத்த நிறுத்த முடியும் என்பது கற்பனையான வாதம். எல்லா மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கின்றது.

சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அரசுகள் மதுபான கடைகளை திறந்து உள்ளது. பீஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சாராம் புழக்கத்தில் உள்ளது. அதற்கு காரணம் அண்டை மாநிலங்களில் மதுபானங்கள் இருப்பதால்தான். அதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

சாராய விற்பனையில் அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை என்று கூறியிருந்தார். மேலும் தயக்கம் ஏன்? என்பது யாரைக் குறித்து கேட்கிறீர்கள் என்ற கேள்விக்கு மதுவிலக்கை வலியுறுத்தும் எல்லோரையும் தான் என்று கூறியிருந்தார்.

அதிமுகவும் மதுவிலக்கை பற்றி சொல்லுகின்றது. ஆனால் அமல் படுத்தவில்லை. அவர்களும் எங்களுடன் சேரட்டும். இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும். அதிமுக வரலாம் எந்த கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பை வலியுறுத்தும் அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

SK27 movie 'Naan Polladhavan' song shooting poster.

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினியின் ‘நான் பொல்லாதவன்’ பாடல் ரீமிக்ஸ்: 6 நாள் பிரம்மாண்ட நடனப் படப்பிடிப்பு!

Jailer 2 Bindaas song release poster.

கலக்கலான ‘பிந்தாஸ்’ பாடலுடன் மிரட்டும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’: அக்டோபர் 15-ல் உலகளாவிய ரிலீஸ்!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

Raaka movie poster featuring Allu Arjun and Atlee.

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியின் ‘ராக்கா’ இரண்டு பாகங்களாக? முதல் பாகம் 2027 டிசம்பரில் ரிலீஸ்!

Daredevil movie cast and production poster.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்தில் இணைந்த உன்னி முகுந்தன்: கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

Mahaan 2 movie theatrical release announcement poster.

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!