Latest News
முற்போக்கு அரசியல்வாதி… சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமான நிலையில் தவெக தலைவர் விஜய் அவருக்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. 72 வயதான இவர் சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை மோசமான நிலையில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லியில் மருத்துவமனைக்கு தானமாக வழங்கி விட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து அவரின் மறைவுக்கு பல தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்ததாவது “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டு இருக்கின்றார்.