Latest News
நீங்க என்ன பண்ணாலும் சரி… எங்களுக்கு பழசு தான் வேணும்… விடாப்பிடியாக நிற்கும் தமிழகஅரசு ஊழியர்கள்…!
மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த போதிலும் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்று அரசு அலுவலர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 24ஆம் தேதி அமல்படுத்துவதற்கு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தில் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 மாதங்களில் எடுக்கப்பட சராசரி அடிப்படையில் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.
முழு ஓய்வூதிய பெறுவதற்காகன தகுதியான பணிக்காலம் 25 ஆண்டுகள் ஆகும். 25 ஆண்டுகளுக்கும் குறைவாக அரசுப்பணியில் இருப்பவர்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும் ஓய்வூதிய தொகை விகிதசராசரி அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும் மத்திய அரசு பங்களிப்பு 14 சதவீதமும் இருக்கின்றது.
ஆனால் மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி 18 சதவீதமாக அது உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிவுறுத்தி இருக்கின்றது.
எங்களுக்கு பழைய ஓய்வூதிய தட்டம் தான் வேண்டும் என்று நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்து ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை வரவேற்கின்றோம். அந்தத் திட்டத்தை தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்காது.
கடந்து 2003 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன் தமிழக அரசு இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் எந்த பிரச்சினையும் எழாது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.