பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

பொது இடத்தில் குப்பை கொட்டுனா இனி அவ்வளவுதான்..? வந்தாச்சு புது டெக்னாலஜி… மாநகராட்சி அதிரடி..!

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம் அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 7000 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது. அதிலும் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவது, கட்டிட கழிவுகளை கொட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் அபராத தொகை 500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக மாநகராட்சி உயர்த்தியது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டிய நபர்களுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபராத தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. அதன்படி போக்குவரத்து போலீசார் அபாரதம் விதிக்க பயன்படுத்தும் கருவி போல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் தற்போது பயன்படுத்தி வருகின்றது.

முதல் கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கின்றது. இந்த கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கப்பட்டு செயல்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.