Latest News
கோயம்பேட்டில் குறைந்த வரத்து… தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!
சென்னை கோயம்பேட்டில் தக்காளிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென்று உயர்ந்திருக்கின்றது.
சென்னை கோயம்பேட்டில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தக்காளி விலை மீண்டும் தற்போது அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக கிலோவுக்கு 50 முதல் 70 ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதிலும் இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றது. மொத்த மார்க்கெட்டில் மட்டும்தான் இந்த விலை. வெளியில் சில்லறை கடைகளில் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மழை பெய்திருந்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்திருக்கின்றது. இதனால் வரும் நாட்களில் மேலும் தக்காளி விலை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த செய்தியானது இல்லத்தரசிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.