Latest News
தமிழகத்தில் முதல் முறையாக மின்சார படகு சவாரி… சுற்றுலா பயணிகள் வரவேற்பு…!
தமிழகத்தில் முதன் முறையாக மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக படகுகள் அனைத்தும் மோட்டார் மூலமாக இயங்கும். ஒரு சில படகுகள் நமது கால்களால் பெடல் செய்து இயக்குவது போல் இருக்கும்.
தற்போது மின்சார படகு சவாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக உதகை படகு இல்லத்தில் டோனட் போட் எனப்படும் மின்சார படகு சவாரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பு பெற்றது.
சத்தமே இல்லாமல் சுடச்சுட டீ, ஊட்டி வர்க்கி, கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டபடி பயணிகள் அதில் மகிழ்ச்சியாக பயணித்தார்கள். இந்த பயணம் உற்சாகமாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தார்கள். மேலும் 20 நிமிடம் பயணம் செய்வதற்கு 5 நபர்களுக்கு 1200 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.