Latest News
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன்… விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது . இதில் இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தார்கள். இந்த போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 விண்கலம் என 29 பதக்கங்களை வென்று 18 வது இடத்தை பிடித்தது.
தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். டி 63 பிரிவில் இவருக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்தது. இந்நிலையில் மாரியப்பன் இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாரியப்பன் ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.