Latest News
10 நாட்களில் 55 லட்சம் பேர்… ஆதார் மையத்தில் குவிந்த கூட்டம்… 14ஆம் தேதி வரை தான் அவகாசமா..?
கடந்த 10 நாட்களில் மட்டும் 55 லட்சம் பேர் ஆதார் மையங்களில் ஆதார் கார்டை புதுப்பித்து இருக்கிறார்கள்.
ஆதார் கார்டு இந்திய மக்களின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. வங்கி கணக்கு தொடங்குவதில் தொடங்கி அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளைப் பெற ஆதார் கார்டு கட்டாயம். எனவே அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகின்றது.
அதாவது அதில் புதுப்பிப்பு என்பது பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன்களை மாற்றி இருப்பார்கள். முகங்களை மாற்றி இருப்பார்கள். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருந்தால் அவர்கள் ரேஷன் கடை, வங்கி மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்சனை ஏற்படும்.
இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காகத்தான் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவிக்கின்றது. 10 ஆண்டுகளுக்கான பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் ஆதார் கார்டு புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள் கை ரேகைகளை புதிதாக பதிவு செய்ய முடியும்.
இந்நிலையில் ஆதார் புதுப்பிக்க வரும் 14ஆம் தேதி தான் கால அவகாசம் என்று தகவல் பரவி வந்த நிலையில் இ சேவை மையம் மற்றும் ஆதார மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் கார்ட்டினை புதுப்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது ஆதார் கார்டினை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது மிக நல்லது.
அப்படி புதுப்பிக்காவிட்டாலும் கார்டு செயல்பாட்டில் தான் இருக்கும். ஆனால் வருகிற 14-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற தவறான வதந்தியை பலர் பரப்பி வருகிறார்கள். புதிய ஆதார் பதிவு செய்வது தவிர மற்ற அனைத்து ஆதாரங்களையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுவது, கைரேகை, கருவிழி பதிவு, முகவரி மாற்றம், பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.